annamalai

annamalai

Friday, August 14, 2015

ஜோதிடம் உண்மையா ? - பகுதி 2






சரணாகதி என்றால் நாம் முழுமையாக கடவுளை நம்பி அவரை உணர்ந்து அவரிடம் நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் ஒப்படைப்பது ஆகும். ஆனால் இன்றைய கால கட்டத்தில் கடவுளை வணங்க கூட நமக்கு நேரம் கிடையாது, இதில் எங்கு சரணாகதி அடைவது. இறை நம்பிக்கை குறைந்து காணப்படும் இந்நாளில் எப்படி சரணாகதி பற்றி பேச முடியும். எல்லாம் என்னால் தான், நான் தான் பெரிய ஆள், எனக்கு தெரியாத விஷயமே கிடையாது என்று ஒவ்வொருவரும் கர்வத்துடன் இருந்தால் எப்படி கடவுளை வணங்குவார்கள். கடவுளை வணங்கவே கஷ்டமாக இருக்கும் இக்கால கட்டததில் எப்படி சரணாகதி அவரிடம் வரும். வராது மறாக கிரகங்களில் வலிமை அவரை தாக்க ஆரம்பிக்கும். அவர் கிரகங்களில் பிடியில் வருகிறான். ஜோதிடத்தை கையில் எடுக்கிறார். ஜோதிடம் வழி நடக்க ஆரம்பிக்கிறான். யாரையும் நாம் குறை கூற முடியாது காலத்தில் கோலம் இது. தெய்வ நம்பிக்கையின் குறைபாடும், நாம் தான் பெரிய ஆள் என நினைக்கும் மனோபவம் தான் காரணம்,

அந்த காலத்தில் குகைகளில் முனிவர்கள் தவம் செய்தார்கள், ஏன் தெரியுமா? அப்பொழுது தான் கிரகங்களில் தாக்கம் இருக்காதாம்.

ஆனால இன்றோ இறை நம்பிக்கை இல்லை, நம்மால் குகையில் போய் தவம் செய்யவும் முடியாது,

எனவே இந்த கால கட்டத்தில் ஜோதிடம் அனைவராலும் வரவேற்க்கப்படுகிறது,

நன்றி,

அண்ணாமலை

No comments:

Post a Comment