annamalai

annamalai

Thursday, August 20, 2015

கடவுளை வணங்கும் முறை யாது?



 நாம் அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் ஏதோ ஒரு உருவத்தில் கடவுளை வணங்குகிறோம். ஆனால் ஒரு சிலர் மட்டுமே வாழ்க்கையில் முன்னேருகிறார்கள், வாழ்வின் உயரத்தை அடைகிறார்கள். காரணம் என்ன? நாம் கடவுளை வணங்கும் முறை தான் காரணம்.

இந்து மதம் ஏன் இவ்வளவு கடவுளை வைத்துள்ளது என்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான விஷயங்கள் பிடிக்கும். ஒரு சிலருக்கு அமைதி பிடிக்கும், சிலருக்கு கோபம் பிடிக்கும், சிலருக்கு புத்திசாலியாக இருப்பது பிடிக்கும், சிலருக்கு ஆற்றல் பிடிக்கும்,சிலருக்கு உலகியல் வாழ்க்கை பிடிக்காது, ஒரு சிலருக்கு உலகியல் வாழ்க்கை மட்டுமே பிடிக்கும். அமைதியை விரும்புபவர்கள் சிவனை பார்த்தவுடன் அவர்கள் மனதில் ஒரு இனம் புரியாத அமைதி ஏற்படும் அவரை அவர்களுக்கு தெரியாமல் பிடிக்கும். புத்திசாலியாக இருப்பவர்களுக்கு விநாயகரை பிடிக்கும். கோப குணம் கொண்டவர்களுக்கு காளி தேவியை பார்த்தவுடன் "அம்மா" என சரணாகதி அடைந்துவிடுவார்கள். ஆற்றல் உடையவர்களுக்கு முருகனை பிடிக்கும். உலகியல் வாழ்க்கை பிடிக்காது என்பவர்கள் தியான கோலத்தில் இருக்கும் தட்ணாமூர்த்தியை வணங்குவர். உலகியல் வாழ்க்கை மட்டுமே பிடிக்கும் என்பவர்கள் வேங்கடாசலபதியை வணங்குவர்.

இப்படி அவரவர் விருப்பதிற்கேற்ப கடவுளை வணங்கத்தான் இந்துமதம் இத்தனை கடவுள்களை படைத்துள்ளது. ஆனால் நடப்பது என்ன ? எந்த ஒரு தெய்வத்தையும் குறிப்பிட்டு வணங்காமல் எல்லா தெய்வங்களையும் நாம் வணங்குவதால் நமக்கு எந்த ஒரு குறிப்பிட்ட தெய்வத்திடமிருந்தும் கிடைக்கும் அருள் அல்லது அனுகிரகம் நமக்கு முழுமையாக கிடைப்பதில்லை. இதற்கு பதில் நீங்கள் ஒரு சிவ பக்கதராக இருந்து எப்போழுதுமே "ஓம் நமசிவாய" என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே இருந்தால் அந்த அண்ணாமாலையாரின் பரிபூரண ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். உங்களை உங்கள் இஷ்ட தெய்வம் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் காத்து நிற்கும். உங்களை எல்லா விதத்திலும் பணம், புகழ், பதவி என எல்லாவற்றையும் உங்களுக்கு எப்போழுது தேவையோ அப்பொழுது உங்களுக்கு கொடுக்கும். இது 200% உண்மை. எனவே அனைத்து தெய்வங்களையும் வணங்குங்கள் ஆனால் ஒரு தெய்வத்தை இஷ்ட தெய்வமாக வழிபடுங்கள். வாழ்வில் மிக மிக உன்னதமான வாழ்வை அடைவீர்கள்.

இஸ்லாமிய மதமும், கிருஸ்தவ மதமும் உலகில் வலிமையான மதமாக மாறியதற்கு முக்கிய காரணம். ஒரு தெய்வ வழிபாடுதான்.

எனவே அனைத்து தெய்வங்களையும் வணங்குங்கள் ஆனால் ஒரு தெய்வத்தை இஷ்ட தெய்வமாக வழிபடுங்கள்.

நன்றி,

அண்ணாமலை

No comments:

Post a Comment